ஜோ லோவின் தந்தையுடைய பணம் பறிமுதல்

ஜோ லோவின் தந்தையுடைய பணம் பறிமுதல்

1 mins read

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி முறைகேடு தொடர்பில் ஜோ லோவை மலேசிய அரசாங்கம் தேடி வரும் நிலையில் அவரது தந்தையின் பெயரில் வங்கிக் கணக்கில் உள்ள 48 மில்லியன் ரிங்கிட்(S$15.9 மில்லியன்) பணத்தை அரசாங்கம் பறிமுதல் செய்வதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜோ லோவின் தந்தை லேரி லாவ் ஹோங் பெங்கின் வங்கிக் கணக்கில் உள்ள தொகையை அரசாங்கம் பறிமுதல் செய்ய நீதிமன்றம் அனுமதிக்கக் கோரி அரசாங்க உதவி வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.