'ஜப்பானில் கட்டடத்திற்குத் தீ வைத்தவர் திட்டமிட்டுச் செய்த கொலை'

'ஜப்பானில் கட்டடத்திற்குத் தீ வைத்தவர் திட்டமிட்டுச் செய்த கொலை'

1 mins read

தோக்கியோ: ஜப்பானில் உள்ள கியோட்டோ அனிமேஷன் அரங்கத்திற்கு வேண்டுமென்றே தீ வைத்த சந்தேக நபர் திட்டமிட்டு நடத்திய கொலை என்பது தெரியவந்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தீ சம்பவத்தில் 33 பேர் உயிரிழந்தனர்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் ஜப்பானில் நடந்துள்ள ஆக மோசமான கொலைச் சம்பவம் இது என்று கூறப்படுகிறது. அந்த ஆடவரை போலிசார் கைது செய்த போது அவர் கோபத்துடன் கூச்சலிட்டு அவரது படைப்புகள் திருடப்பட்டுள்ளதாகக் கூறியதுபோல தனக்குக் கேட்டதாகச் சம்பவ இடத்திற்கு அருகே இருந்த பெண் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.