காபூல் குண்டு வெடிப்பில் 8 பேர் மரணம்; பலர் காயம்

காபூல் குண்டு வெடிப்பில் 8 பேர் மரணம்; பலர் காயம்

1 mins read

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்கு அருகே நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். தேர்வு எழுதுவதற்காக காத்திருந்த மாணவர்களில் சிலர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று நடந்த தாக்குதலுக்கு தாங்கள் காரணமல்ல என்று தலிபான் போராளிகள் குழு அறிவித்துள்ளது.