இலங்கையுடன் ராணுவ ஒத்துழைப்பு உடன்பாடு; அமெரிக்கா விருப்பம்

இலங்கையுடன் ராணுவ ஒத்துழைப்பு உடன்பாடு; அமெரிக்கா விருப்பம்

1 mins read

கொழும்பு: இலங்கையுடன் ராணுவ ஒத்துழைப்பு உடன்பாடு செய்துகொள்ள அமெரிக்கா விரும்புவதாகவும் மற்றபடி இலங்கையில் ராணுவத் தளம் அமைக்கும் நோக்கம் எதுவும் அமெரிக்காவுக்கு இல்லை என்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அலாய்னா டெப்லிட்ஸ் கூறியுள்ளார். தொலைக்காட்சி பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கையுடன் சிறப்புப் படை ராணுவ ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட அமெரிக்கா திட்டமிட்டிருப்பது குறித்து இலங்கையில் உள்ளூர் ஊடகங்களும் சில அரசியல் ஆய்வாளர்களும் குறை கூறி வரும் வேளையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்தகைய உடன்பாடு செய்துகொள்வதை இலங்கையின் இறையாண்மைக்கு ஒரு மிரட்டலாக அவர்கள் பார்க்கின்றனர் என்று திருவாட்டி அலாய்னா கூறினார்.