அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜப்பான், தென்கொரியா பயணம்

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜப்பான், தென்கொரியா பயணம்

1 mins read

வாஷிங்டன்: ஜப்பானுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் வர்த்தகப் பூசல் நீடிக்கும் வேளையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கூறினார். தென்கொரியா மீது கடுமையான வர்த்தகத் தடைகளை ஜப்பான் விதித்துள்ளதால் அவ்விரு நாடுகளுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக ஜான் போல்டன் அந்த நாடுகளுக்குச் செல்கிறார். தென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுங் யூ யோங் உட்பட உயர் அதிகாரிகளுடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.