கெய்ரோ: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் எகிப்து தலைநகரம் கெய்ரோ செல்லும் அதன் அனைத்து விமானங்களின் சேவைகளும் ஒரு வாரத்துக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு காரணங்களுக்காக விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானச் சேவையை சீர்குலைக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக கெய்ரோ செல்லும் விமானங்களின் சேவைகளைத் தற்காலிகமாக ரத்து செய்திருப்பதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தி்ன் பேச்சாளர் கூறினார்.
எகிப்தில் இருந்து பிரிட்டன் செல்லும் விமானங்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

