வாஷிங்டன்: நிலவில் மனிதர்கள் முதன் முதலாக கால் பதித்த 50வது ஆண்டு விழா உலகம் முழுவதும் சனிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நாளை ஆயிரக்கணக்கான மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நாசா விண்வெளி வீரரான நீல் ஆர்ம்ஸ்ட்ராங் முதன் முதலில் நிலவில் கால் பதித்தார். கடந்த 1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் நாள் 'அப்பல்லோ 2 ' விண்கலம் நிலவில் தரை இறங்கியது. அந்த விண்கலத்தில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்குடன் புஸ் ஆல்ட்ரின் மற்றும் மைக் கோலின்ஸ் ஆகிய மேலும் இரு நாசா வீரர்களும் சென்றனர்.
முதலில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்தைத்் தொடர்ந்து இரண்டாவதாக புஸ் ஆல்ட்ரின் நிலவில் இறங்கினார். நீல் ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த 2012ஆம் ஆண்டு 82வது வயதில் மரணம் அடைந்தார். புஸ் ஆல்ட்ரின் முதுமை காரணமாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளார்.

