லிஸ்பன்: போர்ச்சுக்கல் நாட்டில் பரவும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பாளரர்கள் போராடி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த அவர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குவதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
தலைநகர் லிஸ்பனிலிருந்து 225 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வட்டாரத்தில் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதாகவும் அப்பகுதியில் வீசும் பலத்த காற்று தீயை அணைப்பதற்கு தடையாக இருப்பதாகவும் தீயணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.
முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருப்பதாக மக்கள் பாதுகாப்பு அமைப்பு ஒன்று கூறியுள்ளது. தீயில் காயம் அடைந்த ஒருவர் லிஸ்பன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு வீரர்கள் 7 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

