பிரிட்டனின் அவசரநிலை கூட்டம் ஒன்றை அந்நாட்டின் பிரதமர் தெரேசா மே நடத்தவிருக்கிறார். பிரிட்டனின் கொடியைத் தாங்கிய எண்ணெய்க் கப்பல் ஒன்றை ஈரான் பறிமுல் செய்தது பற்றி உள்ளூர் நேரப்படி 10.30 மணிக்கு அந்தக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படும்.
'ஸ்தெனா இம்பெரோ' என்ற அந்தக் கப்பலை ஈரான் ஓமானுக்குச் சொந்தமான கடற்பகுதியில் கைப்பற்றியது. ஈரானைச் சேர்ந்த மீன்பிடி படகு ஒன்றை பிரிட்டனின் கப்பல் மோதியதால் தான் இவ்வாறு செய்ததாக ஈரான் கூறியது. ஆயினும் இதற்கான எந்த ஆதாரத்தையும் ஈரான் வழங்கவில்லை என்கிறது பிரிட்டன்.
பதவி விலகப்போகும் திருமதி மேயின் ஆக முக்கியமான நடவடிக்கைகளில் இது ஒன்றாக இருக்கப்போகிறது.

