ஜப்பானிய நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்கும் உடற்குறையுள்ளோர் இருவர்

ஜப்பானிய நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்கும் உடற்குறையுள்ளோர் இருவர்

1 mins read
a7c20a62-3fa2-4207-885b-4f170a2603eb
-

உடற்குறையுள்ள இருவர், ஜப்பானிய நாடாளுமன்றத்தின் மேலவையில் இரண்டு இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர்களில் ஒருவரான யஷுஹிக்கோ ஃபுனாகோ, வயதான நோயாளிகளுக்கான மருத்துவ சேவைகளை வழங்கும் நிறுவனம் ஒன்றின் துணைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.

'எமியோடிரோபிக் லெட்டரல் ஸ்க்லெரோசிஸ்' என்ற நரம்பு சார்ந்த நோயால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது உடற் தசைகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை மெல்ல இழந்துவிடுவர்.

நாடாளுமன்ற இடத்தை வென்ற மற்றொருவரான இக்கோ குமுராவு, ஒரு மூளை முடக்குவாத நோயாளி.

இவர்கள் இருவரும் 'ரெய்வா' என்ற சிறிய எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள். உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளை அடுத்த ஆண்டு ஜப்பான் ஏற்று நடத்தும் வேளையில் இந்த நியமனங்கள் குறிப்பிடத்தக்கவை.