தலையிடுவதை நிறுத்தவும்: சீனா எச்சரிக்கை

பெய்ஜிங்: ஹாங்காங்கில் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு அமெரிக்க அதிகாரிகள் காரணம் என்று சீனா குற்றம்சாட்டியுள்ளது. ஹாங்காங் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று சீனா அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளது. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஹாங்காங்கில் வெடித்துள்ள வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர், ஆர்ப்பாட்டங்களுக்கு அமெரிக்க அதிகாரிகள் காரணம் எனத் தெரிவித்தார். வழக்கு விசாரணைக்காக ஹாங்காங்கிலிருந்து சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆர்ப்பாட்டங்களை மிகவும் பொறுப்புடன் எதிர்கொண்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

“நாங்கள் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக இணைந்து செயல்படுகிறோம். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்,” என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைச் சந்திப்பதற்கு முன்பு வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அதிபர் டிரம்ப்.

கடந்த இரண்டு மாதங்களாக ஹாங்காங்கில் வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 1997ஆம் ஆண்டில் ஹாங்காங்கை சீனாவிடம் பிரிட்டன் திருப்பி ஒப்படைத்த பிறகு கடந்த இரண்டு மாதங்களில் ஆக மோசமான வன்முறைச் சம்பவங்கள் அங்கே நிகழ்ந்து வருகிறது.

ஹாங்காங்கை சீனாவிடம் திருப்பி ஒப்படைத்தபோது ‘ஒரே நாடு இரண்டு ஆட்சிமுறை’ என்ற முறையின்படி ஹாங்காங் நிர்வகிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் சீனா இந்தக் கொள்கையை ஓரங்கட்டி ஆதிக்கம் செலுத்தப்பார்ப்பதாக ஹாங்காங்கில் சிலர் குறைகூறி வருகின்றனர்.

இதற்கிடையே, ஹாங்காங் போலிஸ் அதிகாரிகள் சிலரின் தனிப்பட்ட விவரங்கள் வெளியே கசிந்ததை அடுத்து அவர்களது பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தப் பிள்ளைகளை சக மாணவர்கள் பள்ளிகளில் அச்சுறுத்துவதாகவும் துன்புறுத்துவதாகவும் ஹாங்காங்கின் நிர்வாக மன்ற உறுப்பினர் தெவித்தார்.

போலிஸ் அதிகாரிகளின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களை வெளியிடும் இணையப்பக்கத்தை கடந்த மாதம் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ஹாங்காங்கில் நிகழ்ந்து வரும் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அங்குள்ள போலிஸ் அதிகாரிகள் கடுமையான மனவுளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக நிர்வாக மன்றம் தெரிவித்தது. நேற்று முன்தினம் அரசாங்க ஆதரவு கும்பலுக்கும் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டோருக்கும் இடையே மூண்ட கைகலப்பில் பலர் காயமுற்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!