'அமெரிக்கக் கப்பல்களைக் கண்காணிப்போம்'

'அமெரிக்கக் கப்பல்களைக் கண்காணிப்போம்'

1 mins read

டெஹ்ரான்: வளைகுடா வட்டாரத்தில் இருக்கும் அனைத்து அமெரிக்கக் கப்பல்களையும் உன்னிப்பாகக் கண்காணிப்போம் என்று ஈரான் கடற்படையின் தலைவர் உசேன் கன்சாடி தெரிவித்துள்ளார்.

"நாங்கள் எதிரி நாடுகளுக்குச் சொந்தமான அனைத்துக் கப்பல்களையும் மிக உன்னிப்பாகக் கண்காணிப்போம். குறிப்பாக அமெரிக்காவின் கப்பல்களைக் கண்காணிப்போம். எதிரி நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்கள் புறப்பட்டு வரும் இடத்திலிருந்து வளைகுடாவில் நுழையும் வரை நாங்கள் அவற்றைக் கண்காணித்து வருவோம்.

"அமெரிக்காவுக்கும் அதன் கூட்டணிப் படைகளுக்கும் சொந்தமான கப்பல்களின் அன்றாடப் போக்குவரத்து குறித்த மிக விரிவான தரவுகள் எங்களிடம் உள்ளது," என்றார் கன்சாடி.