மிண்டானாவ்வில் பயிற்சி அளிக்கும் வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்

மிண்டானாவ்வில் பயிற்சி அளிக்கும் வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்

1 mins read

மிண்டானாவ்: தற்கொலைத் தாக்குதல்கள் நடத்துவது குறித்து பிலிப்பீன்ஸின் மிண்டானாவ் தீவில் உள்ள உள்ளூர் போராளிகளுக்கு வெளிநாட்டைச் சேர்ந்த குறைந்தது ஏழு பயங்கரவாதிகள் பயிற்சி அளித்து வருவதாக அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

அண்மையில் அங்கு நடத்தப்பட்ட முதல் தற்கொலைத் தாக்குதலுக்கு இந்த வெளிநாட்டுப் பயங்கரவாதிகளே காரணம் என்று பிலிப்பீன்ஸ் ராணுவம் கூறியது.

அந்தத் தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்களும் பொதுமக்களில் மூவரும் உயிரிழந்தனர். வெளிநாட்டுப் பயங்கரவாதிகளின் நாடுகளை பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.