முன்னாள் சீனப் பிரதமர் லீ பெங் காலமானார்

முன்னாள் சீனப் பிரதமர் லீ பெங் காலமானார்

1 mins read

பெய்ஜிங்: சீனாவின் முன்னாள் பிரதமர் லீ பெங் காலமானார். அவருக்கு 90 வயது.

நோய் காரணமாக அவர் இறந்ததாக சீன ஊடகம் தெரிவித்தது.

1980களிலும் 1990களிலும் அவர் பல உயர் பதவிகளை வகித்தார்.

1989ஆம் ஆண்டில் சீனாவில் நிகழ்ந்த ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களை அடக்க அவர் பெரும் பங்காற்றினார். அப்போது ஆயிரக்கணக்கானோரை சீன ராணுவம் கொன்றது.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அவசியமானவை என்று திரு லீ அப்போது குறிப்பிட்டிருந்தார்.