பாரிஸ்: ஐரோப்பிய நாடுகளில் இந்த கோடை காலத்தில் அனல் காற்றின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் பிரான்சில் கடும் வெப்பம் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரான்சின் தென்மேற்கில் உள்ள ஒரு நகரில் வெப்ப அளவு 41.2 டிகிரி செல்சியாக பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்ந்துலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இந்த வாரம் வெப்ப அளவு உச்ச கட்டத்தை எட்டக்கூடும் என்று ஆய்வு மையத்தின் அதிகாரிகள் முன்னுரைத்துள்ளனர்.
பருவநிலை மாற்றமும் அனல்காற்று வீசுவதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

