திரங்கானு: ஓராண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த கரையோர ரயில் திட்டத்தை மலேசியா நேற்று ஆரம்பித்தது. திரங்கானுவின் டன்கனிலிருந்து பஹாங்கின் மென்டாகாப் வரையிலான இந்த ரயில் பாதைக்கான செலவு 44 பில்லியன் ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதில் 85% திட்ட நிதிக்கான துணை உடன்பாடு விரைவில் கையெழுத்தாகும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் நேற்றைய தொடக்கவிழாவில் தெரிவித்துள்ளார். திட்டத்துக்கான செலவு குறைக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் குறைந்த வட்டியே செலுத்த வேண்டியிருக்கும் என்றார் அவர்.
சீனாவுடன் இணைந்து மலேசியா மேற்கொள்ளும் இந்தத் திட்டம், மலேசியாவின் அதிகம் வளர்ச்சியடையாத கிழக்குக் கரையோரப் பகுதிகளை வசதியான மேற்குக் கரையோரப் பகுதிகளுடன் இணைக்கும்.

