சிலாங்கூர், மலேசியா: ஷா அலாம் மாவட்டத்திலுள்ள குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் ஒன்பது மாத ஆண் குழந்தை, நீர் நிறைந்த வாளிக்குள் மூழ்கி உயிரிழந்தது. இந்தச் சம்பவத்தின் தொடர்பில் அந்தப் பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளரை போலிசார் கைது செய்துள்ளனர்.
பராமரிப்பு நிலையத்தில் இருந்த மற்றவர்கள் வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, நீர் நிறைந்த ஒரு வாளியில் அந்தக் குழந்தை மூழ்கியிருப்பதை அங்குள்ள பராமரிப்பாளர்களில் ஒருவர் கவனித்தார். உடனே அந்தக் குழந்தை மருந்தகம் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அந்தக் குழந்தை இறந்துவிட்டதாக அங்கு உறுதி செய்யப்பட்டது.
சம்பவம் நடந்த பராமரிப்பு நிலையத்தில் அந்தக் குழந்தை பத்து நாட்களுக்கு முன்னர்தான் சேர்க்கப்பட்டிருந்ததாக போலிசார் தெரிவித்தனர். சம்பவம் நடந்தபோது அந்த நிலையத்தில் பத்து குழந்தைகள் இருந்தன.
விசாரணை தொடர்கிறது.

