40 மி. அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்கம் கொள்ளை

40 மி. அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்கம் கொள்ளை

1 mins read

சாவ் பாலோ: பிரேசிலின் சாவ் பாலோ நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 40 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்கம் மற்றும் விலைமதிப்புமிக்க உலோகப் பொருட்களை ஆயுதமேந்திய கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.

போலிஸ் வாகனம்போல் தோற்றமளித்த வாகனத்தில் கொள்ளையர்கள் விமான நிலையத்திற்கு வந்ததைக் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளி காட்டியது. முகத்தை மூடியபடி அந்த வாகனத்தில் இருந்து இறங்கிய ஆடவர் நால்வர், விமான நிலைய ஊழியர்களை மிரட்டி, ஏதோ விசாரித்தனர். அந்நால்வரில் ஒருவரிடம் துப்பாக்கி இருந்தது.

பின்னர் அவர்கள் சரக்கு முனையத்திற்குச் சென்று, 750 கிலோ தங்கம் மற்றும் விலைமதிப்புமிக்க உலோகங்களைக் கொள்ளை அடித்ததுடன், ஊழியர்கள் இருவரையும் பிணையாகப் பிடித்துச் சென்றனர்.