எல்லைச் சுவர் எழுப்ப அமெரிக்க நீதிமன்றம் அனுமதி

எல்லைச் சுவர் எழுப்ப அமெரிக்க நீதிமன்றம் அனுமதி

2 mins read

வாஷிங்டன்: அமெரிக்க- மெக்சிகோ இடையே சுவர் எழுப்பும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் திட்டத்திற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம் அமெரிக்காவின் தெற்கு எல்லையில் சுவர் அமைப்பதற்குத் தேவையான 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை அமெரிக்க தற்காப்பு அமைச்சின் நிதியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவினர் திரு டிரம்ப்புக்கு சாதகமான தீர்ப்பை வழங்கினர்.

மெக்சிகோவிலிருந்து சட்டவிரோத குடியேறிகள் அமெரி்க்காவுக்குள் நுழைவதைத் தடுக்க அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டப்படும் என்று திரு டிரம்ப் அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது மக்க ளுக்கு வாக்குறுதி கொடுத்தி ருந்தார்.

எல்லைச் சுவர் எழுப்புவதற்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, எல்லைச்சுவர் எழுப்பும் திட்டத்திற்கு தற்காப்பு அமைச்சின் நிதியை பயன் படுத்துவதற்கு கலிஃபோர்னியா மாநில நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\

இந்நிலையில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

திரு டிரம்பின் சுவர் எழுப்பும் திட்டத்திற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பெரும் வரவேற்பைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிரம்ப், அவரது டுவி்ட்டர் பக்கத்தில், "எல்லைச் சுவர் தொடர்பாக மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. அமெரிக்க - மெக்சிகோ எல்லை தென்பகுதியில் சுவர் எழுப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக திரு டிரம்ப், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி இல்லாமலேயே எல்லைச் சுவர் எழுப்ப தற்காப்பு அமைச்சின் நிதியைப் பெறுவதற்கு வழி வகுக்கும் வகையில் அவசர அறிவிப்பை வெளியிட்டார்.

இருப்பினும் எல்லைச் சுவர் எழுப்ப போதுமான நிதியைப் பொறுவதில் திரு டரம்ப் தொடர்ந்து சிக்கலை எதிர்நோக்கினார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது.

ஆனால் ராணுவ நிதியை சுவர் எழுப்பும் திட்டத்திற்கு பயன் படுத்துவது சரியல்லை என்று அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். ஜனநாய கக் கட்சி உறுப்பினர்கள் சிலரும் இதே கருத்தை கூறியுள்ளனர்.