சோல்: தென்கொரியாவில் உள்ள ஓர் இரவு விடுதியின் தாழ்வாரம் சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்ததாகவும் 17க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த தாகவும் அதிகாரிகள் கூறினர்.
காயம் அடைந்தவர்களில் பலர் உலக நீச்சல் போட்டி விளையாட்டாளர்கள் என்றும் அவர்களுக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தென்கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த விளையாட்டாளர்கள் அமெரிக்கா, நியூலாந்து, நெதர்லாந்து, இத்தாலி, பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
விடுதிக் கட்டடம் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த இருவரும் தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. தாழ்வாரம் சரிந்து விழுந்தபோது அந்த இரவு விடுதியில் சுமார் 370 பேர் இருந்ததாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
உலக நீச்சல் போட்டி விளையாட்டாளர்கள் சிலரும் அந்த விடுதியில் அப்போது இருந்ததாக அந்த அதிகாரி கூறினார்.

