யங்கோன்: மியன்மார் நாட்டின் கச்சின் மாநிலத்துக்குட்பட்ட பாகன்ட் பகுதியில் உள்ள பச்சை மாணிக்கக் கல் வெட்டி எடுக்கும் சுரங்கத் தொழிலாளர்கள் 13 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
சரிந்து விழுந்த சுரங்கத்தின் மேல் பகுதி சுமார் 700 அடி ஆழத்தில் உள்ளே உறங்கியவர்களின் மீது விழுந்து மூடியது.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் 13 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உயிருக்குப் போராடிய இருவரைக் காயங்களுடன் மீட்டனர்.

