சோல்: கடற்பகுதியில் நுழைவு விதிகளை மீறியதற்காகப் பிடிக்கப்பட்ட ரஷ்ய மீன்பிடிப் படகுகளை வடகொரியா விடுவித்தது.
மீன்வள ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை முடக்குவது பற்றி ரஷ்யா எச்சரிக்கை விடுத்ததன் தொடர்பிலான சம்பவம் ஒன்றின்போது வடகொரியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் இதைத் தெரிவித்தது.
நுழைவு விதிகளை மீறியதாக 15 ரஷ்யர்களையும் இரண்டு தென்கொரியர்களையும் கடந்த 17ஆம் தேதி வடகொரியா தடுப்புக் காவலில் வைத்தது. ஆனால், அவர்கள் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது. மேலும் வடகொரியாவின் இச்செயல் சட்ட விரோதமானது என்றும் ரஷ்ய படகுகள் வடகொரிய கடல்பகுதிக்குள் நுழையவில்லை என்றும் ரஷ்ய மீன்வளப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இந்தப் பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்படாத வரையில் ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் வடகொரியா மீன்பிடிப்பதற்கான ஒதுக்கீடு உள்ளிட்டவை அடங்கிய மீன்வள ஒத்துழைப்பிற்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படாது என்று ரஷ்யா கூறியது. இரண்டு தென்கொரியர்களும் விடுவிக்கப்பட்டதாக தூதரகத்தின் ஃபேஸ்புக் பதிவு தெரிவிக்கிறது.

