காபூல்: அமெரிக்க படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளாத வரை ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் நேரடியாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை என்று தலிபான் தெரிவித்துள்ளது.
இன்னும் இரண்டு வாரங்களில் தலிபான் அமைப்புடன் ஐரோப்பிய நாடு ஒன்றில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம் கூறியிருந்த நிலையில், தலிபான் அதிகாரி ஒருவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவைக் கலைத்து அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்க கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

