லாட்டரி, சூதாட்ட நடவடிக்கைகளை நிறுத்த டுட்டர்டே உத்தரவு

லாட்டரி, சூதாட்ட நடவடிக்கைகளை நிறுத்த டுட்டர்டே உத்தரவு

1 mins read

மணிலா: பிலிப்பீன்ஸ் அறநிறுவன லாட்டரி அலுவலகத்தால் நடத்தப்படும் அனைத்து வகையான லாட்டரிகள், சூதாட்ட நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அந்நாட்டு அதிபர் டுட்டர்டே உத்தரவிட்டுள்ளார்.

அதன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். நீதித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய புள்ளிகள் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று கூறிய அவர், விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

ஒருவேளை இந்த விசாரணையை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டாலும் தான் பொருட்படுத்தப்போவதில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.