பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குயிஸோஹு மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 22 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர், 40 பேரை உயிருடன் மீட்டனர். அப்போதைய நிலவரப்படி 11 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. ஆனால், தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்ததாகவும் மேலும் 15 பேரைக் காணவில்லை என்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

