ஜப்பானில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம்

ஜப்பானில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம்

1 mins read

தோக்கியோ: ஜப்பானின் தெற்கு கடலோர பகுதியையொட்டிய ஹோன்ஷு தீவில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலுக்கு அடியில் 420 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஆய்வு மையம் தெரிவிக்கிறது. தோக்கியோவின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.