(காணொளி): கலிஃபோர்னியா மாநிலத்தில் துப்பாக்கிச்சூடு; நால்வர் மரணம்

(காணொளி): கலிஃபோர்னியா மாநிலத்தில் துப்பாக்கிச்சூடு; நால்வர் மரணம்

1 mins read
5bae4a31-93ec-45b4-b84d-28cccdc97561
-

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உணவு விழா ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன. மாண்டோரில் துப்பாக்கிக்காரர் என சந்தேகிக்கப்படுபவரும் ஒருவர் எனக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் மேலும் 15 பேர் காயமடைந்தனர்.

சமுதாயத்திற்கு நல்லது செய்யும் ஒரு நிகழ்ச்சியில் இவ்வாறு நடந்தது மிகவும் வருத்தத்திற்குரியது என்று கில்ராய் நகரின் போலிஸ் தலைவர் ஸ்மித்தி தெரிவித்தார்.

சந்தேக நபரின் உயிரிழப்புக்கு முன்னதாக, சம்பவத்தில் இருக்கும் அனைவரும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்