அஸ்மின் அலி: முழுத் தவணைக்கும் டாக்டர் மகாதீர் பிரதமராக இருப்பது அவசியம்

அஸ்மின் அலி: முழுத் தவணைக்கும் டாக்டர் மகாதீர் பிரதமராக இருப்பது அவசியம்

2 mins read

மகாதீர் முகம்மது முழுத் தவணைக் காலத்துக்கும் மலேசியப் பிரதமராக இருப்பதை ஆதரிப்போம் என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கூறியிருப்பதைப் பொருளியல் விவகாரத்துறை அமைச்சர் அஸ்மின் அலி வரவேற்றுள்ளார்.

"டாக்டர் மகாதீர் முழுத் தவணைக் காலத்துக்கும் பிரதமராக செயல்பட பாஸ் மற்றும் அம்னோ கட்சிகள் முழு ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதாக பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வெளியிட்ட அறிக்கையை நான் வரவேற்கிறேன்," என்று நேற்று தமது ஃபேஸ்புக் பதிவில் திரு அஸ்மின் குறிப்பிட்டார்.

மலேசியாவில் மலாய் முஸ்லிம்களின் நலன்களை நிலைநாட்ட அடுத்த தேர்தல் வரை டாக்டர் மகாதீர் பிரதமர் பதவியில் இருக்க வேண்டும் என பாஸ் மற்றும் அம்னோ கட்சிகள் விரும்புவதாக திரு அப்துல் ஹாடி கடந்த வெள்ளிக்கிழமை கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

தேசிய அளவில் பல்வேறு சீர்திருத்த பணிகளைச் செய்யவும் பொருளியலை மீட்கவும் டாக்டர் மகாதீர் முழுத் தவணைக் காலத்துக்கும் பிரதமராக இருப்பது அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

மலேசியாவின் அரசியல் வட்டாரத்தை உலுக்கிய ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரம் தொடர்பில் பிகேஆர் கட்சித் துணைத் தலைவரான திரு அஸ்மினுக்கும் அக்கட்சித் தலைவரான அன்வார் இப்ராஹிமுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து திரு அஸ்மின் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

"பிரதமருக்கு ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சிகளின் ஆதரவு இருப்பது மலேசிய அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இங்கு மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

"தேர்தல்களில் வாக்களிக்கும் வயதை 18ஆக குறைக்க அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டபோதே அந்த ஒற்றுமை வெளிப்பட்டது.

"இந்த இருகட்சி ஆதரவு, டாக்டர் மகாதீர் தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கையைக் காட்டுகிறது", என திரு அஸ்மின் குறிப்பிட்டார். நாட்டின் அடிப்படை அம்சங்களையும் அரசுமீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் அரசியல் நிலைத்தன்மை வலுப்படுத்தும் எனத் தாம் நம்பு

வதாக அவர் சொன்னார்.