கோலாகலமான முறையில் அரச பாரம்பரியம், கலாசாரம் முறைப்படி மலேசியாவின் 16வது மாமன்னராக பாகாங்கின் சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் இன்று அரியணை ஏறினார்.
இவருக்கும் முன்பு மாமன்னராகப் பதவி வகித்த கிளந்தானின் சுல்தான் முகம்மது V ஆச்சரியமூட்டும் வகையில் ஆறு மாதங்களுக்கு முன்னர் பதவி விலகியதை அடுத்து இந்தப் புதிய மாமன்னரின் அரியணை ஏற்பு விழா நடைபெற்றது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலுள்ள தேசிய மாளிகையில் நடைபெற்ற அரியணை ஏறும் விழாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாமன்னராகப் பதவியேற்றுகொண்டார் 60 வயது மாமன்னர்.
மலேசியாவின் ஒன்பது மாநிலங்களின் அரசர்களுள் ஒருவர் ஐந்து ஆண்டு தவணைக்கு மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

