ரயிலின் முன்பு தள்ளிவிடப்பட்ட சிறுவன் பலி

ரயிலின் முன்பு தள்ளிவிடப்பட்ட சிறுவன் பலி

1 mins read
397764a1-1eaf-4e5e-a6ef-c4867a80a746
சம்பவம் நடந்த இடத்தை போலிசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். படம்: ஏஎஃப்பி -

ஃபிராங்ஃபர்ட்: ஆடவர் ஒருவர் ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த சிறுவன் ஒருவனை வந்து கொண்டிருந்த ரயிலின் முன்னால் தள்ளிவிட்டதால் பலியானான்.

இது தொடர்பாக எரித்ரிய நாட்டவரான 40 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எட்டு வயது சிறுவனின் தாயையும் அவர் ரயிலுக்கு முன் தள்ளிவிட்டுள்ளார். ஆனால், அவர் காயங்களுடன் தப்பித்தார்.

ஆடவர் வேண்டுமென்றே இவர்களைத் தள்ளிவிட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாக போலிசார் தெரிவித்தனர்.

ஆனால், அவர் இவ்வாறு செய்ததற்கான காரணம் குறித்து எதுவும் தெரியவில்லை எனவும் அவர்கள் கூறினர்.

சம்பவத்திற்குப் பிறகு ரயில் நிலையத்தில் இருந்து தப்பியோட முயன்ற அந்த ஆடவரை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். இச்சம்பவத்திற்குப் பிறகு, ஃபிராங்ஃபர்ட் ரயில் நிலையத்தின் பல நடைமேடைகள் மூடப்பட்டன.