மேற்கு ஆப்கானிஸ்தானில் பேருந்து ஒன்று சாலையோரத்தில் இருந்த வெடிகுண்டை இடித்துத் தீப்பிழம்பான சம்பவத்தில் பெண்களும் பிள்ளைகளும் உள்ளிட்ட பயணிகள் பலர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
"தலிபான் பயங்கரவாத அமைப்புக்குச் சொந்தமான வெடிகுண்டு கண்டஹார்-ஹெராட் நெடுஞ்சாலையின் ஓரத்தில் கிடந்திருந்தது. அதன் மீது பேருந்து ஒன்று இடித்தது. சம்பவத்தில் இதுவரை குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் 10 பேர் காயமடைந்தனர்," என்று ஃபாரா மாநிலத்தின் பேச்சாளர் திரு முஹிபுல்லாஹ் முஹிப் தெரிவித்தார்.
சம்பவத்தை தலிபான உடனே பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுப்போரில் பொதுமக்கள் அதிர்ச்சிக்குரிய அளவில் கொல்லப்பட்டு வருவதாக ஐக்கிய நாட்டு அமைப்பு கூறி ஒரு நாளைக்குப் பிறகு இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

