ஒசாமா பின் லாடனின் மகன் உயிரிழந்தார்

ஒசாமா பின் லாடனின் மகன் உயிரிழந்தார்

1 mins read
f07a4fe2-5c9c-4f90-a3af-6bfdfabf3f2e
-
Google News Preferred Icon

அல்-கயிதா பயங்கரவாத அமைப்பை நிறுவிய ஒசாமா பின் லாடனின் மகன் ஹம்ஸா உயிரிழந்ததாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

ஹம்ஸா பின் லாடனின் மரணத்தைப் பற்றிய தகவலைப் பெற்றிருப்பதாக மூன்று அதிகாரிகள் உறுதி செய்திருப்பதாக என்பிசி தெரிவித்தது. ஆனால் அவர் எங்கு, எப்போது , எப்படி உயிரிழந்தார் போன்ற விவரங்களை அந்த அதிகாரிகள் வெளியிடவில்லை.

இது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அதிபர் டிரம்ப் எதையும் கூற மறுத்துள்ளார்.

2001ஆம் ஆண்டில் செப்டம்ர் 11ல் அமெரிக்காவில் தற்கொலைத் தாக்குதலை நடத்திய ஒசாமா பின் லாடன், 2011ஆம் ஆண்டு மே மாதத்தில் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார். அல் கயிதாவின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கான பயிற்சி அவரது மகன் ஹம்சாவுக்குக் கொடுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.