பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி

1 mins read

பலுசிஸ்தான்: பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கவுட்டா நகரில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில்

5 பேர் பலியாகினர்.

இதுகுறித்து பாகிஸ்தான் போலிசார் தரப்பில், "பாகிஸ்தா

னின் கவுட்டா நகரில் போலிஸ் வாகனத்தைக் குறிவைத்து சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 2 போலிஸ் அதிகாரிகள் உட்பட 5 பேர் பலியாகினர். 38 பேர் காயமடைந்தனர்.

"இந்தத் தாக்குதல் அப்பகுதியின் போலிஸ் துணை ஆணையரைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தாக்குதலில் காயத்துடன் அவர் தப்பித்துவிட்டார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத

இயக்கமும் பொறுப்பேற்க

வில்லை.

குண்டுவெடிப்பில் காயமடைந் தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளதாகவும், இந்தக் குண்டுவெடிப்பு காரணமாக அருகிலுள்ள வீடுகள் மற்றும் கடைகளில் அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.