கட்டாயத் திருமணம்; துபாய் இளவரசி வழக்கு

கட்டாயத் திருமணம்; துபாய் இளவரசி வழக்கு

1 mins read

லண்டன்: துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித்துக்கும் அவரின் 6வது மனைவியான ஹயா பின்ட் அல் ஹுசைனுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த மே மாதம் ஹயா தலைமறைவானார்.

இந்நிலையில் தனக்கு கட்டாயத் திருமணம் நடத்தப்பட்டதாகக் கூறியும் பாதுகாப்பு கேட்டும் லண்டன் நீதிமன்றத்தில் ஹயா வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அப்போது தனது குழந்தைகளை துபாய்க்கே திருப்பி அனுப்புமாறு ஷேக் முகமது சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் வழக்கை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.