ஜப்பானுக்கு தென்கொரியா எச்சரிக்கை

ஜப்பானுக்கு தென்கொரியா எச்சரிக்கை

1 mins read

பேங்காக்: ஜப்பானின் முன்னுரிமை வர்த்தக நாடுகள்

நிலையில் இருந்து சோல் நீக்கப்பட்டால் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது.

சோல் நகரில் செயல்படும் சிப், திறன்பேசி தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனம் ஒன்றிற்கு ரசாயனங்கள் ஏற்றுமதி செய்யக் கடந்த மாதம் ஜப்பான் கடுமையான தடைகளை விதித்தது.

இந்நிலையில், சோலை முன்னுரிமை வர்த்தக பங்காளி என்ற நிலையிலிருந்து நீக்கப் போவதாகவும் ஜப்பான் நேற்று அறிவித்தது.

இதனால், தென்கொரியா வின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்க நேரிடும்.

கடந்த வியாழக்கிழமை பேங்காக்கில் நடைபெற்ற வட்டார நாடுகளுக்கான வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின்போது ஜப்பானின் முடிவைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு தென்கொரிய வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தினர்.

"சோல் மீது தடைகள் விதிக்கப்பட்டால், கடும் விளைவுகள் ஏற்படும் என்றும் அது இருதரப்பு உறவைக் கடுமையாகப் பாதிக்கும் என்று நான் தெளிவுபடுத்தி உள்ளேன்," என்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறினார் தென் கொரிய வெளியுறவு அமைச்சர்.