பெட்டாலிங் ஜெயா: மலேசியப் பிரதமர் பொறுப்பை பிகேஆர் கட்சித் தலைவர் அன்வாரிடம் விரைவில் ஒப்படைப்பேன் என்று டாக்டர் மகாதீர் முகம்மது கூறிவரும் நிலையில், முழுத் தவணை காலத்திற்கும் மகாதீர் பிரதமராக நீடிக்குமாறு சில எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன்பே மகாதீர் பதவி விலகி அதனை அன்வாரிடம் ஒப்படைப்பாரா என்ற கேள்வி அண்மைகாலமாக மலேசிய அரசியல் வட்டாரத்தில் இருந்து வந்தது.
ஆனால், தமது வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றப்போவதாக துருக்கிய தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியின்போது மகாதீர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சில எதிர்க்கட்சி பிரதிநிதிகள் கடந்த செவ்வாய்கிழமை இரவு மகாதீரைச் சந்தித்ததாகவும் அப்போது "அடுத்த பொதுத் தேர்தல் வரை மகாதீர் பிரதமராக நீடிப்பதற்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளோம். பாதி காலத்தில் அன்வாரிடமோ அல்லது வேறு யாரிடமாவது பிரதமர் பதவியை ஒப்படைக்க தங்களுக்கு உடன்பாடில்லை," என்று கூறியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இச்-சந்-திப்பு மூன்று மணி நேரம் நீடித்-த-தா-கக் கூறப்-ப-டு-கிறது.

