ஈரான் அமைச்சருக்குத் தடை

ஈரான் அமைச்சருக்குத் தடை

1 mins read

வாஷிங்டன்: ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவித் ஸரிஃப்் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஈரான் மூத்த தலைவர் அயதுல்லா அலி காமேனி சார்பாக ஜாவித் செயற்பட்டதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் ஈரானுக்கான முதன்மை செய்தித் தொடர்பாளராக அவர் செயற்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஈரானுக்கு வெளியே தனக்கு எந்தச் சொத்தும் இல்லாத நிலையில் இத்தடையால் தனக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார் ஜாவித்.