அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தி

அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தி

1 mins read

வாஷிங்டன்: பொருளாதார சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அகற்றும் வகையில் அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.

ஆனால், சிறிய அளவிலான வட்டி விகித குறைப்பு போதுமானது அல்ல என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வட்டி விகித குறைப்பு என்பது ஒருவகையில் வெற்றி என்றாலும் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெரிய உதவி எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதையே இது காட்டுவதாகவும் டிரம்ப் விமர்சித்துள்ளார். ஆனால், வட்டி விகித குறைப்புக்கு டிரம்பின் அழுத்தம் ஒரு காரணி அல்ல என ரிசர்வ் வங்கி தலைவர் பாவெல் கூறியுள்ளார்.