கேளிக்கைக்கான வரலாற்று நாடகங்களைத் தடை செய்யும் சீனா

கேளிக்கைக்கான வரலாற்று நாடகங்களைத் தடை செய்யும் சீனா

1 mins read
2fb5ce03-88d7-4324-aa63-580c7f73d10b
-

சீனாவில் ஒளிபரப்பப்பட்டு வந்த கேளிக்கைக்கான தொலைக்காட்சி வரலாற்று நாடகங்களை அந்நாட்டின் அரசாங்கம் தடை செய்துள்ளது. சீனாவை கம்யூனிஸ்டு கட்சி ஆட்சிக்குக் கொண்டு வந்து 70 ஆண்டுகள் நிறைவானதை அனுசரிக்கும் விதத்தில் அந்நாட்டில் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன.

அப்படி வரலாற்று நாடகங்கள் தயாரிக்கப்பட்டால் சீன மக்களின் மீள்திறனையும் வளர்ச்சியையும் சிறப்பிக்கும் விதமாக இருக்கவேண்டும் என்று அரசாங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிரபல நடிகர்களை மையப்படும் நாடகங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் என்று கூறிய சீனா, அத்தகைய நாடகங்களுக்குப் பதிலாக நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஊடக நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டது. இத்தகைய நாடகங்களால் சமுதாயத்திற்கு கெடுதலை ஏற்படுத்துவதாக 'பெய்ஜிங் டெய்லி' அரசு நாளிதழ் தெரிவித்தது.