தென்கொரியா பதில் நடவடிக்கை

சோல்/தோக்கியோ: தென்கொரியா, ‘வெள்ளைப் பட்டியல்’ எனப்படும் முன்னுரிமை வர்த்தக நாடுகளுக்கான தனது பட்டியலிலிருந்து ஜப்பானை நீக்கியுள்ளது. ஜப்பான் இதேபோல தென்கொரியாவை பட்டியலிலிருந்து நீக்கிய சில மணி நேரங்களிலேயே தென்கொரியாவின் இந்த நடவடிக்கையை அந்நாட்டு நிதி அமைச்சர் ஹோங் நாம் கீ நேற்று அறிவித்தார்.

“இந்த விவகாரத்தை அரசதந்திர முறையின்படி தீர்க்க நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவோம். ஆயினும், நாங்கள் ஜப்பானை எங்களது வெள்ளைப் பட்டியலிலிருந்து அகற்றுவோம். அத்துடன், ஏற்றுமதிகள் மீதான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளவுள்ளோம்,” என்று திரு ஹோங் எச்சரித்தார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக வர்த்தக முன்னுரிமை பெறும் நாடுகளுக்கான தனது பட்டியலிலிருந்து தென்கொரியாவை நீக்கிய ஜப்பான், இருநாட்டு உறவுகளைக் குலைப்பது தனது நோக்கமல்ல என்று தெளிபடுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு வர்த்தக அமைச்சர் ஹிரோஷிகே செகோ, ஜப்பானின் இந்த நடவடிக்கை எந்த விதத்திலும் வர்த்தகத் தடை அல்ல என்று கூறினார்.

2004ஆம் ஆண்டு முதல் வர்த்தகச் சலுகைகளையும் முன்னுரிமைகளையும் பெற்று வந்த தென்கொரியாவை ஜப்பான் இனி பட்டியலுக்கு வெளியிலுள்ள நாடுகளுக்கான வர்த்தக செயல்

முறைகளுக்கு உட்படுத்தும் என்றார் திரு செகோ. ஆயினும், தனது நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்க ஜப்பான் முற்படுவதாகக் குற்றம் சாட்டிய தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், இதற்கான பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எந்தவித மேல் விளக்கமுமின்றி எச்சரித்தார். அவர் இதனை அறிவித்த சில மணி நேரங்களில் தென்கொரியா இந்தப் பதில் நடவடிக்கையை அறிவித்தது.

உலகத் தளவாடத் துறையில் இரு நாடுகளின் இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்தப்போகும் பாதிப்பைத் திரு செகோ தட்டிக்கழித்திருக்கிறார். ஆனால், அனைத்துலக அளவில் இது மின்னணுவியல் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

இரு நாடு–க–ளுக்–கும் இடையே மோச–ம–டை–யும் வர்த்–தகப் போரால் ஆசிய பசி–பிக் வட்–டா–ரத்–தில் வர்த்–த–கப் பதற்–ற–நிலை அதி–க–ரித்–துள்–ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!