சுமத்ரா தீவு அருகே நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு

சுமத்ரா தீவு அருகே நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே நேற்று வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அது ரிக்டர் அளவில் 7 எனப் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வுக் கழகம் தெரிவித்தது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்பேரிடரைத் தொடர்ந்து சேதம் ஏற்பட்டதாகவோ யாரும் காயமடைந்ததாகவோ நேற்றிரவு வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஜகார்த்தாவின் பல கட்டடங்கள் குலுங்கின.