அகதிகள் ஊடுருவுவதைத் தவிர்க்கும் மெக்சிகோ

அகதிகள் ஊடுருவுவதைத் தவிர்க்கும் மெக்சிகோ

1 mins read

மெக்சிகோ சிட்டி: மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயரும் மக்களைத் தடுத்து நிறுத்தி வரும் மெக்சிகோ அரசு, அவர்களுக்கென தற்காலிக இருப்பிடம் அமைத்துக் கொடுத்துள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளில் உணவு, தொழில் இன்றித் தவிக்கும் மக்கள், மெக்சிகோ வழியாக அமெரிக்கா நோக்கி படையெடுக்கின்றனர். அண்மையில் சட்டவிரோத ஊடுருவலைத் தவிர்க்கும்படி மெக்சிகோ அரசுக்கு அறிவுறுத்திய அதிபர் டிரம்ப், புலம்பெயர்வதைத் தடுக்காவிட்டால் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அதிகப்படியான வரி விதிக்கப்படும் என எச்சரித்தார்.