இந்தோனீசிய நிலநடுக்கத்தில் நால்வர் மரணம்

இந்தோனீசிய நிலநடுக்கத்தில் நால்வர் மரணம்

1 mins read
202b6f61-b23b-4f50-b1af-74fcfadd2bbb
நிலநடுக்கத்தில் சேதமடைந்த தன் வீட்டை சோகத்துடன் பார்வையிடும் அதன் உரிமையாளர். படம்: ஏஎஃப்பி -

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நான்கு பேர் மாண்டதாக தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு நேற்று தெரிவித்தது.

நிலநடுக்கம் காரணமாக பந்தென் மாகாணத்தில் லெபாக் பகுதியில் மாரடைப்பு மற்றும் சோர்வு காரணமாக இருவரும் மேற்கு ஜாவா மாகாணத்தில் சுகபூமி பகுதியில் இருவரும் உயிரிழந்ததாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. நான்கு பேர் காயமடைந்தனர்.

மாண்டவர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், இப்பகுதிகளில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட 10 கட்டடங்கள், 223 வீடுகள் சேதமடைந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.