பினாங்கு பாலத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்த பெண்

பினாங்கு பாலத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்த பெண்

1 mins read

ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் பினாங்கு பாலத்தில் இருந்து விழுந்த 36 வயது பெண் உயிர் பிழைத்துள்ளார்.

பெண் ஒருவர் பாலத்தில் இருந்து கீழே விழுவதைப் பார்த்த ஒருவர் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் தங்களை அழைத்ததாக ஜார்ஜ் டவுன் போலிசார் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு அந்தப் பெண் காப்பாற்றப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

தனது கார் பழுதடைந்த நிலையில், பாலத்தில் நின்று கொண்டிருந்தபோது, கீழே விழுந்ததாக அப்பெண் கூறினார்.

தனக்கு நீச்சல் தெரியாது என்றாலும் தண்ணீரில் மிதக்கக்கூடிய நுட்பம் தனக்குத் தெரியும் என அவர் சொன்னார்.

காப்பாற்றப்பட்ட அப்பெண் ஜெல்லி மீன்கள் கடித்திருந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலிசார் கூறினர்.

அப்பெண்ணின் தாயார் கடந்த 17 நாட்களுக்கு முன்னர் மாண்டார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவர் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரின் கணவர் கூறினார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் மூன்று பேர் பினாங்கு பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாக பதிவான புள்ளி விவரங்கள் கூறுவதாக தி ஸ்டார் செய்தி கூறுகிறது.

இதே எண்ணிக்கை கடந்த 2017, 2018 ஆகிய இரண்டு ஆண்டும் தலா ஒன்று என இருந்துள்ளது.