ஹீத்ரோவில் 100க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து

ஹீத்ரோவில் 100க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து

1 mins read

லண்டன்: ஹீத்ரோ விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு திட்டமிட்டுள்ள நிலையில், 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஹீத்ரோ விமான நிலைய ஊழியர்கள் நாளையும் நாளை மறுநாளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தைத் தவிர்க்கும் வகையில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 172 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லையெனில், 23, 24ஆம் தேதி் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஊழியர் சங்கம் திட்டமிட்டுள்ளது.