வாஷிங்டன்: சாலையில் தரையிறங்கிய விமானம்

வாஷிங்டன்: சாலையில் தரையிறங்கிய விமானம்

1 mins read

வாஷிங்டன்: ஒரு சிறிய ரக விமானம் ஒன்று அமெரிக்காவின் முக்கிய சாலையில் தரையிறங்கியதால் வாகனமோட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

வாஷிங்டனில் உள்ள டகோமா நகர, பிரதான சாலையில் மற்ற வாகனங்களுக்கிடையில் சாலை சமிக்‌ஞைக்கு சற்று முன்னர் அந்த விமானம் தரையிறங்கியது அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

விமானத்தின் எரிவாயு அமைப்பில் ஏற்பட்ட கோளாற்றின் காரணத்தால் அந்த விமானம் அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.