இந்தோனீசியாவில் பெரும் மின்தடை

இந்தோனீசியாவில் பெரும் மின்தடை

1 mins read
8b80283c-3d5a-4a1f-beb2-12a01a55a4fd
இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தா, ஜாவா தீவில் ஏற்பட்ட மின்தடை யால், ரயில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். படம்: ஏஎஃப்பி -

ஜகார்த்தா: பெரும் மின்தடையால் இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தா, ஜாவாவில் உள்ள அண்டை மாகாணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

ஜாவாவில் உள்ள பல மின் நிலையங்களில் உண்டான கோளாற்றால் நேற்று மாலை இந்த மின்தடை ஏற்பட்டதாக அந்நாட்டின் மாநில மின்சார நிறுவனமான பி.எல்.என் ஞாயிற்றுக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மின்தடை காரணமாக ரயில்களில் இருந்து பயணிகளை வெளியேற்ற வேண்டியிருந்தது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது ரயில்வே நிறுவனம்.

மேலும் மின்தடை காரணமாக சில பகுதிகளில் போக்குவரத்து சமிக்ஞைகள் செயல்படாமல் போனதாலும் ரயில் பயணம் தடைப்பட்டதாலும் பெரும் பயணிகள் சிக்கித் தவித்தனர்.

ஜகார்த்தாவின் பெரும்பாலான பகுதிகள் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அங்குள்ள அலுவலகங்கள், வீடுகளில் மக்கள் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துகின்றனர்.

கிழக்கு ஜாவாவில் மத்திய, மேற்கு பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், நேற்று நள்ளிரவில் மின்தடை அகல வாய்ப்புள்ளதாக பிஎல்என் தலைவர், இயக்குநர் நேற்று மாலை நம்பிக்கை தெரிவித்திருந்தார்.