அன்வார் பிரதமராவதற்குக் குரல்கொடுக்கும் கெஅடிலான் தலைவர்கள்

அன்வார் பிரதமராவதற்குக் குரல்கொடுக்கும் கெஅடிலான் தலைவர்கள்

1 mins read
4a41e9b5-614e-47a3-b627-f20857d946b0
-

மலேசியாவின் ஆளுங்கூட்டணியில் அங்கம் வகிக்கும் கெஅடிலான் ராக்யாட் கட்சியைச் சேர்ந்த 197 பிரிவுகளின் தலைவர்கள், கட்சித் தலைவர் அன்வார் அடுத்த பிரதமராவதை ஆதரிப்பதாக அறிவித்தனர். நாடு முழுவதும் பரந்திருக்கும் அந்தப் பிரிவுகளின் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கட்சியை வழிநடத்தவும் முன்னெடுக்கவும் திரு அன்வாருக்குத் தங்கள் உறுதியான ஆதரவை வெளிப்படுத்த கடமைப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

கெஅடிலான் ராக்யாட் கட்சிக்கு மொத்தம் 219 பிரிவுகள் உள்ளன.

மலேசியாவில் அடுத்தப் பிரதமராக யார் வருவது குறித்து 71 வயது திரு அன்வாருக்கும் கெஅடிலான் ராக்யாட் கட்சியின் 54 வயது துணைத்தலைவர் அஸ்மின் அலிக்கும் இடையே உட்பூசல் நிகழும் இந்நேரத்தில் பிரதமர் மகாதீர் முகம்மது தமது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவேற்றுமாறு 'த ஸ்டார்' பத்திரிகை தெரிவித்தது. இஸ்லாமிய மலாய் தேசியவாதியாகக் கருதப்படும் டாக்டர் மகாதீர் தொடர்ந்து பிரதமராக இருப்பதை விரும்புவதாக அந்தக் கட்சிகள் தெரிவித்தன. திரு அஸ்மினை ஓரின பாலியல் சர்ச்சையுடன் தொடர்புபடுத்தும் காணொளி ஒன்று வெளியானதை அடுத்து இந்த உட்பூசல் மேலும் மோசமானது.