கார்கள் மோதிய கோர விபத்து; 19 பேர் பலி

கார்கள் மோதிய கோர விபத்து; 19 பேர் பலி

1 mins read
5d2a2858-2918-407b-a4c7-9307e4b62a29
பொதுமக்களும் எகிப்து பாதுகாப்பு படையினரும் விபத்தில் கருகிய கார் ஒன்றைச் சுற்றி நிற்கிறார்கள். படம்: ஏஎஃப்பி -

கெய்ரோ: எகிப்தில் அதிவேகமாகச் சென்ற கார், எதிரே வந்த கார்களின் மீது மோதி வெடித்துச் சிதறியது.

அந்நாட்டின் கெய்ரோ நகரின் நெருக்கடி மிகுந்த சாலை ஒன்றில் போக்குவரத்து விதியை மீறி அதிவேகத்தில் காரை ஓட்டிச் சென்ற மர்ம நபர் ஒருவரால் இந்த விபத்து நிகழ்ந்தது.

தேசிய புற்றுநோய் மையம் அருகில் சென்றபோது, திடீர் என்று எதிர்திசையில் வந்த 3 கார்கள் மீது மோதியதில், மர்ம நபர் ஓட்டிச்சென்ற கார் வெடித்துச் சிதறியது.

இதில் 4 கார்களும் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்தன. தீயணைப்பு படையினரும் போலிசாரும் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் 19 பேர் உடல் கருகி உயிரிழந்ததாகவும் 30 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரில் வெடிகுண்டு நிரப்பட்டு இருந்ததா, தற்கொலை படை தாக்குதலா என்ற கோணத்தில் கெய்ரோ போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.