அமேசான் ஆற்றில் வாழும் மிகப்பெரிய மீன் மலேசியாவின் சாபா மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
108 கிலோ எடையும் 2.4 மீட்டர் நீளமும் கொண்ட அந்த மீன் 'ஆரபைமா' இனத்தைச் சேர்ந்தது.
நேற்று காலை 6.30 மணியளவில் சாபாவில் உள்ள 'துன் ஃபுவாட் ஸ்டீஃபன்ஸ்' (Tun Fuad Stephens) எரிக்கு அருகே மெதுவோட்டம் செய்துகொண்டிருந்தவர்கள் ஏரிக் கரையோரமாக அந்த மீனைப் பார்த்தார்கள். மீன் இறந்துவிட்டிருந்தது.
அந்த மீனை வளர்த்தவர்களை அதனைப் பராமரிக்க முடியாமல் ஏரியில் விட்டிருக்கக்கூடும் என்று மேயர் நோர்டின் சிமான் கூறியுள்ளார்.
அம்மீனின் படம் ஒன்று சமூக ஊடகங்களில் 'வைரலாக' பரவிக்கொண்டு வருகிறது.

